Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலித் என்பதால் திருவள்ளுவர் சிலை நிறுவ அனுமதிக்கப்படவில்லையா? - வைரமுத்து கோபம்

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (02:41 IST)
தலித் என்பதால் திருவள்ளுவர் சிலை நிறுவ அனுமதிக்கப்படவில்லையா? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
உத்திரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி செய்தார். கடந்த 29-ந் தேதி ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட விழாவில் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
ஆனால், சாதுக்களின் கடும் எதிர்ப்பால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது. ஆனால், தற்போது அங்குள்ள பூங்கா ஒன்றில் கறுப்பு நிற கவரால் சுற்றி, கட்டப்பட்ட நிலையில், கேட்பாரற்று கிடக்கிறது.
 
திருவள்ளுவர் சிலைக்கு நேர்ந்த அவலம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கவிஞர் வைரமுத்து, ’’திருவள்ளுவர் தலித் என்பதால் சிலை நிறுவ அனுமதிக்கப்பட வில்லையா? அவர் தமிழர்! தமிழின் ஞான அடையாளம்! ஒருவேளை அவர் தலித் என்பது உண்மையானால் தமிழருக்கு சிறுமையல்ல தமிழருக்கு அது பெருமைதான். 
 
திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது தமிழர் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சிலை அவமதிப்பு விவகாரத்தில் உத்தராகண்ட் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழறிஞர், தமிழ் அமைப்புகள் இணைந்து சிலையை மீட்டெடுக்கும்’’ என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்கள் தரமானதாக இல்லை: ப சிதம்பரம்

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments