Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாறு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 25 மார்ச் 2025 (10:08 IST)
2026ஆம் ஆண்டு மார்சில் திருநள்ளாறு தார்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக, இந்த கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்படும்.
 
சனீஸ்வர பகவானை தரிசிக்க, வாரந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இந்நிலையில், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2025 மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என்று கூறப்படுவதால் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 
இதை தெளிவுபடுத்தும் வகையில், திருநள்ளாறு தார்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரி கு. அருணகிரிநாதன், மாவட்ட ஆட்சியர் மற்றும் கோயில் தனி அதிகாரி சோமசேகர் அப்பாராவ் உத்தரவின் பேரில், நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:
 
"சனிப்பெயர்ச்சி தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவுகின்றன. குறிப்பாக, 2025 மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என்பது ஒரு தவறான தகவல். திருநள்ளாறு கோயில் வாக்கிய பஞ்சாங்க முறையை பின்பற்றுகிறது. அந்த கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டில்தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும்.
 
எனவே, வரும் மார்ச் 29ஆம் தேதி கோயிலில் வழக்கமான தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும். சனிப்பெயர்ச்சி விழாவின் திகதி மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

முதுநிலை ஆசிரியர் தேர்வு எப்போது? 2025ஆம் ஆண்டின் அட்டவணை வெளியீடு..!

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments