Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநருக்கு கெடு விதித்த ஸ்டாலின்: வரவேற்கும் திருமா!

ஆளுநருக்கு கெடு விதித்த ஸ்டாலின்: வரவேற்கும் திருமா!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (09:25 IST)
ஆளும் அதிமுக அரசில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஒரு வார காலத்துக்குள் உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கெடு விதித்திருந்தார்.


 
 
நேற்று ஆளுநரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்தை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட ஆளுநருக்கு ஒரு வாரம் காலக்கெடு விதித்துள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டார்.
 
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஆளுநர் இது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை என கூறுவது அழகல்ல. ஆளுநர் மத்திய பாஜக அரசு சொல்வதை செய்கிறார்.
 
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்து, எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஒரு வார காலத்திற்குள் உத்தரவிட வேண்டும் என அவருக்கு ஒருவார காலம் கெடு விதித்திருப்பதை வரவேற்கிறேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments