Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில் 'விடுதலை சிறுத்தைகள்' இருக்கிறதா? திருமாவளவன் பதில்

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (20:44 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகிவிடும் என்று செய்திகள் வெளிவந்தன. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் உள்பட ஒருசில கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாகி காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதை உறுதி செய்தன. திருமாவளவன் ஒருபடி மேலே போய் ராகுல்காந்தியை டெல்லியில் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். திமுக தலைமையில் தனி கூட்டணி அமைந்தால் அந்த கூட்டணியில் தாங்கள் இல்லை என்பதை மறைமுகமாக கூறும் வகையில் இருந்தது.

ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி, திமுகவுடனான கூட்டணியை முறித்து கொள்ள விரும்பவில்லை. கமல்ஹாசன் என்ற பொய்க்குதிரை, ஜாதிக்கட்சியான விடுதலைசிறுத்தைகள் ஆகியவற்றை நம்பி களத்தில் குதிக்க அக்கட்சி தயாரில்லை என்பதையே ஒருசில நிகழ்வுகள் காட்டுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதால் விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக, கமல்ஹாசன் கட்சி போன்ற கட்சிகளுக்கு திமுக கூட்டணியை தவிர வேற சாய்ஸ் இல்லை. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், 'விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் உள்ளது என்பதை திமுக தான் அறிவிக்க வேண்டும் என்றும், அந்த பொறுப்பு தி.மு.கவு.க்கு தான் உண்டு என்றும், தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணக்கமாக தான் இருந்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments