Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன சித்து வேலை செய்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை: திருமாவளவன்

Webdunia
ஞாயிறு, 28 மே 2023 (13:23 IST)
தமிழ்நாட்டில் பாஜக என்ன சித்து வேலை செய்தாலும், எத்தனை அச்சுறுத்தல்களை செய்தாலும் இங்கு அவர்களுக்கு இடம் இல்லை என்பதை 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மீண்டும் நிரூபணம் செய்வார்கள் என -விசிக தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெறுவதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கருப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ‘
செங்கோலை ஏந்துகிறோம் என்ற பெயரில் நடத்துகிற நாடகம், அரசியல் சூதாட்டம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்துள்ளோம்;
 
ஆதீனங்களை அழைத்து சிறப்பிப்பது தமிழ்நாட்டு மக்களை குறி வைத்து காய்களை நகர்த்தி சங்பரிக்குவார் அமைப்புகள் செய்கின்ற சூது, ஏமாற்று வேலை” என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments