Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 வயது மூதாட்டி வன்கொடுமை செய்து கொலை! – தேனியில் கொடூரம்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (12:04 IST)
தேனியில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் மூதாட்டி ஒருவரை வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தலையில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மூதாட்டியின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி பிரேச பரிசோதனைக்கு அனுப்பியதில் மூதாட்டி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து உடனடியாக தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் காமயகவுண்டன் பட்டியை சேர்ந்த ஞானநேசன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் ஞானநேசன் தான் குடிபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இந்த உண்மை வெளியே தெரியாமல் இருக்க மூதாட்டியின் தலையில் கல்லை போட்டு கொன்றதாகவும் ஒத்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்