Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரை கொன்று நாடகமாடிய மனைவி.! 4 மாதங்களுக்குப் பின் கைது..!!

Senthil Velan
வெள்ளி, 26 ஜூலை 2024 (12:56 IST)
சென்னை வில்லிவாக்கத்தில் கணவரை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியை, 4 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 57வது தெருவைச் சேர்ந்தவர் கவுஷ் பாஷா. இவரது மனைவி ஷாஜிதா பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி கவுஷ் பாஷா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக அவரது மனைவி ஷாஜிதா பானு உறவினர்களிடம் தெரிவித்தார்.  ஏற்கனவே அவருக்கு சர்க்கரை,  நுரையீரல் சமந்தமாக நோய் மற்றும் வலிப்பு ஆகிய பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது.   

உயிரிழந்த கவுஷ் பாஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க வில்லிவாக்கம் போலீசார் முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரின் மனைவி ஷாஜிதா பானு, எங்கள் மத முறைப்படி பிரேத ரிசோதனை செய்ய மாட்டோம் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதனால் சந்தேகமடைந்த போலீசார் கவுஷ் பாஷாவின் உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் ஷாஜிதா பானுவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.  பிரேத பரிசோதனையில் கவுஷ் பாஷா கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரது மனைவி ஷாஜிதா பானுவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி  விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஷாஜிதா பானு பாலியல் வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று வந்தது தெரிய வந்தது.
 
மேலும் விசாரணையின் போது தனது கணவர் கவுஷ் பாஷாவை கழுத்தை நெரித்து கொன்றதை ஷாஜிதா பானு ஒப்புக் கொண்டார். கவுஷ் பாஷாவிற்கு தோல் நோய் இருந்ததால் ஷாஜிதா பானு அவர் அருகில் செல்லமாட்டார் எனவும்  இதனால் கடந்த பிப்ரவரி மாதம் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.  இதில் ஆத்திரமடைந்த  ஷாஜிதா பானு தனது கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ALSO READ: கிடப்பில் போடப்பட்ட மசோதாக்கள்.! ஆளுநர்களுக்கு பறந்த உத்தரவு.! உச்சநீதிமன்றம் அதிரடி ..!!
 
மேலும் கவுஷ் பாஷாவிற்கு பேய் பிடித்ததால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த போலீசார்,   ஷாஜிதா பானுவை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். கணவரை கொன்று மனைவி நாடகமாடிய சம்பவம் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

அடுத்த கட்டுரையில்