Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு புடவை, ஆண்களுக்கு வேட்டி வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (13:56 IST)
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் மக்களுக்காக பணியில் ஆக்டிவாக இயங்கி வருகிறது.

சமீபத்தில், சென்னை, பனையூரில், விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணி, இளைஞரணி, மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று வேலூர் மாவட்டம் கீழ் ஆலந்தூர் ஊராட்சியில், புதிய மக்கள் இயக்க பெயர்ப்பலை மற்றும் இயக்கக் கொடியை ஏற்றி வைத்து, பெண்களுக்கு புடவை, ஆண்களுக்கு வேட்டி, மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் சமூக வலைதள பக்கத்தில்,

’’தளபதி  விஜய்  அவர்களின்  வாழ்த்துக்களோடு, வேலூர் மாவட்ட கீ.வ.குப்பம் ஒன்றிய இளைஞரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, கீழ்ஆலந்தூர் ஊராட்சியில் புதிய மக்கள் இயக்க பெயர்ப் பலகை திறந்து வைத்து இயக்கக் கொடியினை ஏற்றி பெண்களுக்கு புடவை, ஆண்களுக்கு வேட்டி, மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பொதுமக்களுக்கு குடங்கள் ஆகியவை வழங்கப்பட்டது.!

இந்நிகழ்ச்சியில் அணித் தலைவர்கள், நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments