Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழகத்திற்கு தலைகுனிவு - மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 26 ஜனவரி 2015 (15:25 IST)
குடியரசு தினமான இன்று தமிழ்க அரசு மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
 
தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கு அவமானத்தையும் அவமரியாதையையும் ஏற்படுத்தி வருகிறது. டெல்லியில் உள்ள அரசு இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை சிறப்பிக்கும் வகையில் குடியரசு விழாவை கொண்டாடும் நேரத்தில், தமிழக அரசு சிறை தண்டனை பெற்றவரின் படத்தை காட்டி வெறுக்கத்தக்க வகையில் துதி பாடுகிறது. தலை சிறந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழகம் இப்படி தர்ம சங்கடப்படுவதும் இகழ்ச்சிக்கு உள்ளாவதையும் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.
 
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படும் விதத்தில் நடந்து கொண்ட இந்த அரசு ஆட்சியில் இருப்பதற்கான தார்மீக உரிமையை இழப்பதோடு மட்டுமன்றி தமிழக மக்களிடமும், இந்திய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
 
மேலும் படங்கள் அடுத்த பக்கம்...






ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

Show comments