Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலா தேவியை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (08:17 IST)
பேராசிரியை நிர்மலா தேவியை 12 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் பல பெண்களின் புகைப்படங்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளின் செல்போன் எண்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கானது தற்பொழுது சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா தேவியை ஏப்ரல் 28ஆம் தேதி வரை 12 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி மும்தாஜ் உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments