Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தை கட்டிப்பிடித்து அழுத ஓட்டுனர்....ஓய்வு பெறும் நாளில் நெகிழ்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (16:11 IST)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலூகாவைச் சேர்ந்த  முத்துப்பாண்டி அரசுப் பேருந்து ஓட்டுனராக  பணியாற்றி வந்த நிலையில்,  நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார். அவர் பேருந்தை தொட்டு வணங்கி  அழுத வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலூகாவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் திருப்பரங்குன்றம் அரசுப்பேருந்து பணிமனையில் ஓட்டுனராகப் பணியாற்றி வந்த நிலையில், நேற்று அனுப்பானடியில் இருந்து மகாலட்சுமி  காலணி செல்லும் பேருந்தை கடைசியாக ஓட்டி தந்து பணியை நிறைவு செய்தார்.

30  ஆண்டுகளாக ஓட்டுனராகப் பணியாற்றிய முத்துப்பாண்டி, நேற்று  பேருந்து நிலையத்திற்குள் பேருந்தை கொண்டு சென்ற பின்னர்,  இருக்கையில் அமர்ந்து பேருந்தின் ஸ்டியரிங், பிரேக் ஆகியவற்றை கையால் தொட்டுப்பார்த்து முத்துப்பாண்டி வணங்கினார்.

அதன்பின்னர், கீழிறங்கி வந்த அவர், பேருந்தின் முன்பக்கத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

ராகுல், கார்கே பேசவில்லையா? நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை..!

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் விலை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments