சென்னையில் 27 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று! – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (08:52 IST)
சென்னை ராயபுரம் பகுதியில் 27 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



சமீப காலங்களில் நகரங்களின் பல பகுதிகளில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் நாய்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராயபுரம் பகுதியில் நாய் ஒன்று நேற்று ஒருநாளில் மட்டும் 20க்கும் மேற்பட்டோரை கடித்ததால் பெரும் பரபரப்பு எழுந்தது.

மக்களை அச்சுறுத்தி வந்த அந்த நாய் பிடிக்கப்பட்ட நிலையில் அதற்கு ரேபிஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் நாயால் கடி வாங்கிய 27 பேரும் 5 டோஸ் தடுப்பூசிகள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாயை போலவே மற்ற நாய்களுக்கும் ரேபிஸ் தொற்று பரவியிருக்கலாம் என மக்களிடையே அச்சம் எழுந்துள்ள நிலையில் தெரு நாய்களிடையே ரேபிஸ் பரவுவதை கண்டறிந்து கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments