Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் நலம் பெற வேண்டி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த தேமுதிகவினர்

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (18:26 IST)
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நலம் பெற வேண்டி  கோயிலில் தேமுதிக கட்சியினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம்  இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது,.  
 
அதில்,  ''திரு விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண நலம் பெறுவார் என்று நம்புகிறோம்'' என்று தெரிவித்தது.
 
இந்த நிலையில், நடிகர் விஜயகாந்த் உடல் நலம்பெற வேண்டும் என சினிமாத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள், தேமுதிக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றன.

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம்பெற வேண்டி கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அருகே வெக்காளி அம்மன் கோயிலில் தேமுதிக கட்சி தொண்டர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
 
மேலும், ''உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் முழுமையான உடல்நலம் பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வழக்கமான மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்'' என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments