Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடு மேய்ப்பதற்கு கொத்தடிமைகளாக விற்கப்பட்ட சிறுவர்கள்! – தஞ்சாவூரில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (09:20 IST)
தஞ்சாவூரில் ஆடு மேய்ப்பதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் கொத்தடிமைகளாக விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் வல்லம் புதூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன். கறி புகை மூட்டும் வேலை செய்து வரும் இவருக்கு 4 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கறி புகை மூட்டுவதில் வருமானம் கிடைக்காத நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் தொடர்பு சுந்தர்ராஜனுக்கு கிடைத்துள்ளது.

பட்டி போட்டு ஆடு மேய்க்கும் கோவிந்தராஜன் ரூபாய் 62 ஆயிரம் கொடுத்து 4 சிறுவர்களையும் ஆடு மேய்ப்பதற்காக 2 ஆண்டுகளுக்கு கொத்தடிமையாக வாங்கியுள்ளார். இந்நிலையில் மன்னார்குடி அருகே சூரக்கோட்டை பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களை விசாரித்த சமூக ஆர்வலர் ஒருவர் சைல்டு லைன் எண்ணிற்கு அழைத்து புகார் அளித்துள்ளார்.

அதை தொடர்ந்து சைல்டு லைன் அதிகாரிகளும், போலீஸாரும் விரைந்து வந்து சிறுவர்களை மீட்டு சிறுவர்கள் இல்லத்தில் சேர்த்துள்ளனர். மேலும் குழந்தைகளை கொத்தடிமையாக விற்ற பெற்றோரிடமும், வாங்கிய கோவிந்தராஜனிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments