Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரட்சித் தலைவி ஜெயலலிதாவை தவிர்த்த தமிழிசை

Webdunia
புதன், 27 ஜூலை 2016 (16:14 IST)
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடெங்கும் அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பில் அவரது நினைவிடம் அருகே கலாமின் வெண்கல சிலை இன்று திறக்கப்பட்டது.


 
 
இந்த திறப்புவிழாவுக்கு வருகை தந்து பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அப்துல்கலாம் நினைவிடம் அமைப்பதற்கு இடம் ஒதுக்கு கொடுத்த தமிழக முதல்வர், புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு நன்றி என கூறினார். மேலும் ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிடும்போதெல்லாம் புரட்சித் தலைவி என்றே குறிப்பிட்டார்.
 
வெங்கய்யா நாயுடுவின் உரையை பாஜக மாநில தலைவர் தமிழிசை தமிழில் மொழிபெயர்த்தார். வெங்கய்யா நாயுடு புரட்சித் தலைவி ஜெயலலிதா என்று கூறியதை தமிழில் மொழிபெயர்த்த போது தமிழிசை புரட்சித் தலைவி என்று கூறாமல் முதல்வர் என்று மட்டுமே கூறினார்.
 
புரட்சித் தலைவி என்றே தமிழிசை கூறுவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் முதல்வர் என்று மட்டும் கூறியதும் விழாவில் கலந்து கொண்ட அதிமுக பிரமுகர்கள் முகம் சுளித்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments