Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி என்பது சாதிப்பெயர்: பாஜகவை விடாமல் துரத்தும் தம்பிதுரை

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (15:50 IST)
இந்தியாவில் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. 

 
இது குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியது பின்வருமாறு, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தந்தால் ஊழலும் அநீதியும்தான் ஏற்படும். நியாயமாக சமூக நீதிக்காகத்தான் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
 
பொருளாதார ரீதியிலான 10% இட ஒதுக்கீட்டின் மூலம், ஊழல் ஏற்படவும், சமூக நீதி மறுக்கப்படவும் வாய்ப்புள்ளது. திசை திருப்புவதற்காகவே பொருளாதார அளவில் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
சட்டத்தை இயற்றிவர்கள் கூட சாதி வேற்றுமை இருக்கக் கூடாது என்பதற்காகவே சாதி அடிப்படையிலான இட ஓதுக்கீட்டை வரவேற்றனர். மேலும் பெரியார், அண்ணா போன்ற திராவிட தலைவர்களால் பெயருக்கு பின்னால் சாதி பெயரை வைத்துக்கொள்வது கிடையாது. 
 
தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் அனைவரும் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை வைத்துக்கொள்கின்றனர். ஏன், நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் நரேந்திரன்தான் ஆனால் அவரே சாதி பெயரான மோடியை வைத்துள்ளார் என்று இந்த இட ஒதுக்கீடு முறையை விமர்சித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments