Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பராமரிப்புப் பணிகளுக்காக ஜவுளி மற்றும் நகைக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்… வியாபாரிகள் கோரிக்கை!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (08:32 IST)
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக நகை மற்றும் ஜவுளிக்கடைகள் 50 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது சம்மந்தமாக ஜவுளி, நகைக் கடை வியாபாரிகள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் ‘திருமண நிகழ்வுகளுக்கு அரசு அனுமதித்துள்ள நிலையில் அதற்கான ஜவுளி மற்றும் நகைகள் வாங்க வேண்டிய சூழல் மக்களுக்கு உள்ளது. அதனால் கடைகள் திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.  ஜவுளி, நகைக் கடை கட்டிடங்களுக்கு 6 மாதங்களுக்கான சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை ரத்து செய்ய வேண்டும். 50 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 24 முதல் 27-ம் தேதி வரை, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும்.’ என ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

நல்லவேளை இந்த அறிவுக்கொழுந்துகள் காமராஜர் காலத்தில் இல்லை!? - எடப்பாடியாரை கலாய்த்த மு.க.ஸ்டாலின்!

காலன் அழைக்கும் வரை கால்கல் ஓயவில்லை! 114 வயதான மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

விமானி அறைக்குள் நுழைய முயன்ற 2 பயணிகள்.. டெல்லி - மும்பை விமானத்தில் 7 மணி நேரம் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்