Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: சின்னத்திரை நடிகை திடீர் கைது

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (16:41 IST)
கடந்த மாதம் நடைபெற்ற தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசார் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
 
போலீசாரின் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பல அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டதோடு, பலியானவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த மறுநாள் சின்னத்திரை நடிகை நிலானி போலீஸ் உடையில் இந்த சம்பவத்தை கண்டித்து பேசிய ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவில் பொதுமக்களை சுடுவதற்கு போலீசாருக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஆவேசமாக பேசியிருந்தார்
 

இந்த நிலையில் நிலானி மீது கடந்த 24ஆம் தேதி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் சற்றுமுன் அவர் குன்னூரில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக போலீஸ் உடையில் அவதூறு கருத்து கூறியதற்காக நடிகை நிலானி கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments