மதுரையை சேர்ந்த 7 பேர் டாடா மேஜிக் வாகனத்தில் குற்றாலத்துக்கு சென்றனர். அங்கு அருவியில் குளித்துவிட்டு மீண்டும் மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மாலை 5 மணிக்கு தென்காசி-கடையநல்லூர் ஆகிய பகுதிக்கு இடையே உள்ள இடைகால் என்னும் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, கோவில் பட்டியில் இருந்து செங்கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு அரசு பேருந்தில் அந்த வாகனம் மோதியது.
இதில் அந்த வாகனம் தூக்கி வீசப்பட்டு இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியினர். மற்ற மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.