Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை – தேர்தல் ஆணையம்

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (18:09 IST)
வரும் ஏப்ரல் 4  ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்த ஓட்டுகள் மே 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது.

எனவே  அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் கவர்ந்தனர். இந்தப் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் வரும் ஏப்ரம் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சிறப்பாகத் தேர்தலை நடத்தை தேர்தல் ஆணையம் பறக்கும் படையை அமைத்து 24 மணிநேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறது.

எனவே வரும் ஏப்ரல் 4  ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டு எண்ணிக்கை நாளான மே 2 ஆம் தேதியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என தமிழக மதுவிலக்கு ஆணையம் ஏற்கனவே  உத்தரவுபிறப்பித்துள்ள நிலையில் இன்று தேர்தல் ஆணையம் வரும் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் விடுமுறை என அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments