உழைத்து பெறும் கூலியை, டாஸ்மாக் மூலம் அரசு பிடுங்கிக்கொள்கிறது: தொல்.திருமாவளவன்
உழைத்து பெறும் கூலியை, டாஸ்மாக் மூலம் அரசு பிடுங்கிக்கொள்கிறது: தொல்.திருமாவளவன்
தொழிலாளர்கள் நாள் முழுவதும் உழைத்து பெறும் கூலியை, டாஸ்மாக் மூலம் அரசு பிடுங்கிக்கொள்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக் கொள்கையை முன்மொழிந்ததற்கு பல காரணங்கள் இருந்தபோதும், தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டலிலிருந்து மீட்டெடுப்பதுதான் முதன்மையான காரணமாகும்.
தொழிலாளர்களை முதலாளிகள் மட்டுமின்றி, அரசும் பல வழிகளில் சுரண்டி வருகிறது. அதில் ஒன்றுதான் டாஸ்மாக் மதுக் கடை. தொழிலாளர்கள் நாள் முழுவதும் உழைத்து பெறும் கூலியை, டாஸ்மாக் மூலம் அரசு பிடுங்கிக்கொள்கிறது.
மே தினத்தை முன்னிட்டாவது, தொழிலாளர்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகள் தொடர்பான எந்தவித உறுதிமொழியையும் திமுக, அதிமுக கட்சிகள் தெரிவிக்காமல் இருப்பது அவர்களுடைய இரட்டை வேடத்தை தெளிவுபடுத்துகிறது.
இவர்கள்தான் படிப்படியாக மதுக் கடைகளை மூடுவோம் எனக் கூறி மக்களை ஏமாற்றி, வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கின்றனர்.
இதுபோல, மதுவிலக்குக் கொள்கையில் தெளிவற்ற நிலையிலிருக்கும் திமுக-அதிமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.