Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவினரின் செல்போன் ஒட்டுக்கேட்பு..! தேர்தல் ஆணையத்தில் புகார்...!!

Senthil Velan
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (16:58 IST)
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.
 
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.  தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ளது. 
 
இந்நிலையில், திமுக வேட்பாளர்கள், முன்னணி அரசியல் தலைவர்களின் செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்கப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் கடிதம் எழுதி உள்ளார்.
 
அதில், தமிழகத்தில் உள்ள முன்னணி அரசியல் கட்சி தலைவர்களின் செல்போன் உரையாடல்களும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் செல்போன் உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இது மத்திய அரசு கொண்டுள்ள சட்டத்தின் விதியை மீறிய செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தனிப்பட்ட சுதந்திரத்தை கெடுக்கும் வகையில், யாருடையை செல்போன் உரையாடல்களையும் ஒட்டுல் கேட்கக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு உள்ளது. 

ALSO READ: மூன்றாம் உலகப் போருக்கு வாய்ப்பு..! போரை நிறுத்தம் திறன் மோடிக்கு உள்ளது..! அண்ணாமலை.....
 
இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று உச்ச நீதிமன்ற உத்தரவுகளும் உள்ளன. இதை எல்லாவற்றையும் மீறி சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் முகமைகள் சட்டவிரோத மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்டு வருகின்றன. இதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதந்திரமான முறையில் மக்களவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பில்கேட்ஸ் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு.. ஆந்திராவில் ஏஐ மையம் நிறுவ முயற்சி..!

மனைவியை கொலை செய்து குக்கரில் வேக வைத்த கணவன்.. ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

கும்பமேளா சமயத்தில் வரும் மவுனி அமாவாசை.. 150 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்..!

பிரிவினையைத் தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்படுகிறார். அண்ணாமலை குற்றச்சாட்டு..

விவேக் ராமசாமி சதி செய்து விரட்டப்பட்டாரா? எலான் பார்த்த உள்ளடி வேலையா?

அடுத்த கட்டுரையில்
Show comments