Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செய்தியாளர்களை தாக்க முயற்சித்த சட்ட விரோத மதுவிற்பனையாளர்கள்

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2016 (20:35 IST)
கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திரு.வி.க இவர் அ.தி.மு.க வில் தொகுதி கழக செயலாளராகவும் இருந்து வந்துள்ளார்.


 


இந்நிலையில் இவரது கட்டுப்பாட்டில் கரூர் திண்ணப்பா கார்னர் பகுதியில் உள்ள மதுபானக்கடை ஒன்று இரவு பகலாக இயங்கி வந்த நிலையில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் இந்நிலையில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை உள்ளே நுழைய கூடாது என்றும், கேமிராவை தூக்கி எறிந்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். 
 
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மீண்டும் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தே பூரண மதுவிலக்கை வலியுறுத்தி படிபடியாக மதுவிலக்கை அமல் படுத்துவது என்றும், அதற்காக இரண்டு மணி நேரம் மதுவிற்பனையை குறைத்தும், தற்போது இன்று முதல் தமிழகத்தில் 500 கடைகளையும், கரூரில் 14 கடைகளையும் மூட சொல்லி உத்திரவிட்ட நிலையில், கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரும், அ.தி.மு.க நிர்வாகியுமான திரு.வி.க விற்கு சொந்தமான கடையானது, 24 மணி நேரமும் இயங்கி வருவது வேதனைக்குரியது என்று கூறுகிறார்கள் அந்த பகுதி மக்கள்.
 
அ.தி.மு.க நிர்வாகிகளே, மேலும் பொதுமக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் இது போன்ற கடைகளை உடனே மூட வேண்டுமென்றும், நிருபர்களை செய்தி சேகரிக்க சென்ற சம்பவத்தில் நிருபர்கள் மற்றும் ஒளிப்படக்காரர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டியதும், சட்டவிரோத மதுவிற்பனை கும்பல் மீது பொதுமக்களும், தன்னார்வலர்களும், நடுநிலையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம் 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments