Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனில் வேலை செய்த தமிழக வாலிபர் மரணம்...

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (20:32 IST)
லண்டனில் வேலை செய்த, கரூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மரணமடைந்து 15 நாட்களுக்கு பிறகு அவரின் உடல் கரூர் வந்து அடைந்தது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நன்னியூர் புதூர் அருகில் உள்ள ந.குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் - கண்ணம்மாள் ஆகியோரின் மகன் கனகராஜ் (32 வயது ) பொறியியல் பட்டதாரி யான இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தனியார் நிறுவனத்தில் கடந்த இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 26.08.2023 அன்று கனகராஜ் இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. மகன் மரணம் அடைந்த சோகத்தில், செய்வது அறியாது தவித்தனர்.கனகராஜ் உடன் வேலை செய்த நண்பர்கள் மற்றும் வெளிநாடு தமிழர்கள் மூலம், இந்திய தூதரகம் துணையுடன் அவரின் உடல் சொந்த ஊரான கரூர் மாவட்டத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு,  நேற்று மதியம் 2 மணி அளவில் கரூர் பாலமாபுரத்தில் உள்ள மின் மயானத்திற்கு கனகராஜின் உடன் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது.

கனகராஜ் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் திரண்டனர். கரூர் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து நன்றாக படித்து பொறியியல் பட்டதாரி ஆக பட்டம் பெற்று, லண்டனில் வேலை கிடைத்து, நம் குடும்பத்தை முன்னேற்றலாம் என்ற எண்ணத்தில் உழைத்த இளைஞரின், அகால மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments