Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 104ஐ தாண்டிய வெப்பநிலை! – வெந்து தணியும் தமிழகம்!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (11:57 IST)
அக்கினி நட்சத்திரம் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெயில் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் அக்கினி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இடையே வங்க கடலில் ஏற்பட்ட புயலால் பல பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் வெப்பநிலை குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தற்போது சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 104டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மேலும் சென்னையின் பல பகுதிகளில் 102 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

திருச்சி, புதுச்சேரி, கரூர், வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரியை தொட்டுள்ளது. 28ம் தேதி அக்கினி வெயில் முடிவடைய உள்ள நிலையில் இன்னும் 4 நாட்களுக்கு வெயில் தொடரும் பின்னர் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments