Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாட்களுக்கு இருக்கு செம மழை.. வானிலை ஆய்வு மையம் ஹேப்பி நியூஸ்!

Webdunia
வியாழன், 18 மே 2023 (09:47 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வரும் நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அக்கினி வெயில் காரணமாக பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பல பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வெயில் வாட்டி வரும் நிலையில் மழை பெய்தால் சற்று இதமாக இருக்கும் என மக்கள் மழையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஆனால் இன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரித்தே காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments