Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் திட்டம்! – தமிழக அரசு ஏற்பாடு!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (15:39 IST)
தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தில் உணவு பொருட்களை வழங்க உணவு பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்க ஸ்மார்ட் ரேசன் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. தவிரவும் வாங்கும் பொருட்கள் குறித்த விவரங்கள் பயனாளர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். இந்நிலையில் உணவு பொருள் வழங்கலை மேலும் மேம்படுத்த பயோமெட்ரிக் சிஸ்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இதை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பயோமெட்ரிக் முறை நடைமுறைக்கு வந்த பிறகு ஸ்மார்ட் கார்டு வைத்திருக்கும் அட்டைதாரர் கைரேகை வைத்து பயோ மெட்ரிக்கில் பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும். கைரேகை பதிவு வேலை செய்யாவிட்டால் பயனாளர் செல்போனுக்கு ஒடிபி எண் அனுப்பப்படும். அதை பதிவு செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments