Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவை சந்திக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் விரைந்தார்

ஜெயலலிதாவை சந்திக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் விரைந்தார்

Webdunia
சனி, 1 அக்டோபர் 2016 (18:55 IST)
உடல்நலக் குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை காண தமிழக ஆளுநர் வித்யாசாகர் விரைந்துள்ளர்.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்னும் ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.   
 
நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஜெயலலிதாவின் உடல் நிலை விபரத்தை அறிய அப்பல்லோ மருத்துவமனையின் வளாகத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். அங்கு அவர்கள் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள, தமிழக ஆளுநர் வித்யாசாகர், அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று மாலை 6.40 மணிக்கு சென்றுள்ளார். அவரை அதிமுக அமைச்சர்களும், மருத்துவர்களும் மருத்துவமனைக்குள் வரவேற்றனர். முதல்வரின் உடல்நிலை குறித்த விவரங்களை அவர் மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார் எனத் தெரிகிறது.
 
ஜெயலலிதாவின் உடல் நிலையை, தமிழக ஆளுநர் மூலம், குடியரசுத் தலைவர் அறிந்து பொதுமக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் குடியரசுத் தலைவருக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார்.
 
இந்நிலையில், தமிழக ஆளுநர் அப்பல்லோவிற்கு சென்றது பரபரப்பான செய்தியாக கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5-பேர் நீரில் மூழ்கி பலி..! பயிற்சியின் போது நிகழ்ந்த பரிதாபம்..!

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி! உக்ரைன் போர் குறித்து புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

திராவிட மாடல் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை.. 2026 தேர்தலில் வெற்றி எங்களுக்கே: முதல்வர் ஸ்டாலின்..!

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments