Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பா கையால் உதயநிதிக்கு விருது!.. மேடையில் சிவகார்த்திகேயன் மகள்! – செஸ் ஒலிம்பியாட் Highlights!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (09:34 IST)
சென்னையில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் விழாவின் இறுதி நிகழ்ச்சி பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28ம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்றது. ஆகஸ்டு 8 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் போட்டியின் இறுதி நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை இயக்கி நேரடி ஒளிபரப்பு செய்யும் பொறுப்பு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி மேற்பார்வை மற்றும் விருந்தினர் உபசரிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக் கொண்டு சிறப்பாக செய்து வந்தார். விழாவை சிறப்பாக நடத்தியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதயநிதிக்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். இதற்காக உதயநிதி அழைக்கப்பட்டபோது அவர் ஓடி வந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதுபோல உதயநிதிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பலரும் ட்விட்டரில் #ThankYouUdhayAnna என்ற ஹேஷ்டேகையும் பதிவு செய்துள்ளனர்.

விழாவில் மற்றுமொரு ஹைலைட் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள். காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என பாரபட்சம் இல்லாமல் அனைத்து முதல்வர்களின் படங்களும் இடம் பெற்றிருந்தது. பெரியார் குறித்து வெளியிடப்பட்ட காணொளியும் பலரின் கவனத்தை ஈர்த்தது. பெரியார் குறித்த இந்த காணொலிக்கு நடிகர் கமல்ஹாசன் பிண்ணனி குரல் பேசியிருந்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. இதில் சிறப்பம்சமாக நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா மற்ற சிறுமியர்களோடு சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினார்.

இந்தியாவில் செஸ் ஒலிம்பியட் நடைபெறுவதால் இந்திய வீரர்கள் கணிசமான அளவில் பதக்கங்களை வெல்ல வேண்டும் என பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. முக்கியமாக இளம் செஸ் வீரர் பிரக்யானந்தா வெகுவாக எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அவர் வெண்கல பதக்கம் வென்றார்.

குகேஷ் மற்றும் நிகள் சரின் தங்க பதக்கமும், எரிகேசி அர்ஜூன் வெள்ளிப்பதக்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை.. அரசாணை வெளியீடு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் அதிருப்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments