Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்களா வன்முறை பண்றோம்.. நீங்களே பாருங்க! – வீடியோ வெளியிட்ட பாஜக

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (11:16 IST)
ஆர்,எஸ்.எஸ் அமைப்பு சென்னையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு 200 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு பணிகளுக்காக தன்னார்வலர்கள், சமூக நல அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்பேரில் சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் சாலை பாதுகாப்பு பணிகள், வீடுகளுக்கு சென்று கணக்கெடுக்கும் பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ம் கொரோனா பாதுகாப்பு பணிகளில் சென்னை மாநகராட்சியோடு இணைந்து பணியாற்றுவதாக தெரிகிறது.

இதற்கு மக்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அவர்கள் பேசி வரும் நிலையில் தமிழக பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற மக்களுக்கு உணவுகளை தயார் செய்து அளித்து வருவதாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை: 3 தனிப்படைகள் அமைப்பு

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு நாள்.. த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

டங்ஸ்டன் விவகாரம்.. வெட்ட வெளிச்சமானது திமுக அரசின் பொய்: எடப்பாடி பழனிசாமி

110 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது! அதிர்ச்சி சம்பவம்..!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முதல்வர் பதிலளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments