தேர்தல் தேதி அறிவிப்பு; இன்றே முடிகிறதா சட்டப்பேரவை கூட்டம்?

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (14:35 IST)
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் இன்றே சட்டமன்ற கூட்டம் முடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் மீதான இரண்டாவது நாள் விவாத கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட முடியாது என்பதால் இன்றுடன் சட்டமன்ற கூட்டம் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்று பிற்பகல் 3 மணிக்கு சட்டமன்ற கூட்டம் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னர் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments