Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்துக்குட்டி தமிழிசை சௌந்தரராஜன்: கலாய்க்கும் துரைமுருகன்!

கத்துக்குட்டி தமிழிசை சௌந்தரராஜன்: கலாய்க்கும் துரைமுருகன்!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2017 (16:03 IST)
திராவிட கட்சிகள் தமிழக விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளித்த திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தமிழிசையை கத்துக்குட்டி என கலாய்த்தார்.


 
 
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தமிழிசையின் திராவிட கட்சிகள் மீதான விமர்சனத்துக்கு பாஜக தலைவர் தமிழிசை அரசியலில் இன்னமும் கத்துக்குடிதான் அவர் எல்கேஜி தான் படித்துக்கொண்டிருக்கிறார் என பதிலளித்தார்.
 
மேலும் திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கட்டப்பட்ட 36 அணைகளை பட்டியலிட்டார். சிறுசிறு கால்வாய்கள் மூலம தண்ணீர் விநியோகிக்க வாய்க்கால்கள் அமைக்கப்பட்டது, கருணாநிதியின் ஆட்சி காலத்தில் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை கூறினார்.
 
காவிரி ஆற்றில் முதன் முதலில் தூர் வாரியது திமுக ஆட்சியில் தான். ஆனால் விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகள் செய்துள்ள திமுகவை பற்றி எதுவும் தெரியாமல் தமிழிசை பேசுகிறார். பாவம் அவரை விட்டுவிடுங்கள் என துரைமுருகன் சிரித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி..!

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments