Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் 'எந்த 7 பேர்'' பேட்டி குறித்து தமிழிசை கருத்து

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (08:57 IST)
நேற்று ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது ஒரு நிருபர் 7 பேர் விடுதலை குறித்த வழக்கில் குடியரசு தலைவரிடம் மத்திய அரசு ஒப்புதல் பெறாமல் இருப்பது ஏன்? என்று கேட்டார். அதற்கு ரஜினிகாந்த் 'எந்தா 7 பேர் என்று கேட்டதும்' ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் என்று நிருபர்கள் விளக்கம் அளித்தனர். அதன் பின்னர் குடியரசு தலைவரிடம் மத்திய அரசு ஒபுதல் பெறாமல் இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு 'எனக்கு தெரியாது' என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.

ஆனால் ரஜினியின் இந்த பதிலை ஒருசில ஊடகங்கள், '7 பேர் விடுதலை பற்றி கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் எந்த 7 பேர் என எதிர் கேள்வி கேட்ட ரஜினி! என்று திரித்து செய்தியை வெளியிட்டன.

இந்த நிலையில் ரஜினியின் 7 பேர் பேட்டி குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, '7 பேர் விடுதலை மற்றும் பாஜக பற்றிய கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை. அதனால் மீண்டும் ஒருமுறை அதே கேள்விகளை கேட்டால் ரஜினி வேறு பதிலை அளிப்பார்' என்று கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments