Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்து கொண்ட தமிழிசையும் - தமிழச்சியும்..!

Mahendran
திங்கள், 25 மார்ச் 2024 (14:44 IST)
தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய இருவரும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதை அடுத்து இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் இந்த தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். அப்போது அவர்கள் கட்டிப் பிடித்துக் கொண்டு பரஸ்பரம் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழச்சி தங்கபாண்டியன் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வாரா? அல்லது தமிழிசை சௌந்தரராஜன் அந்த வெற்றியை பறிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments