திடீரென உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த விஜய்.. என்ன காரணம்?

Siva
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (09:23 IST)
தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய குற்றங்களை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.  இந்த மனுவை, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்துள்ளார். 
 
கடந்த ஜூலை 27-ஆம் தேதி, திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியே, 27 வயதான கவின் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணுடன் உறவில் இருந்ததால், அந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது. 
 
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, பல அரசியல் கட்சிகள், சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தி வரும் நிலையில் தவெக இதற்கான ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments