Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு தொடர் மழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (10:20 IST)
தமிழகத்தில் நவம்பர் 8-ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.


வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் இன்று 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்திலுள்ள விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை சிவகெங்கை உள்பட 7 ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 8-ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதோடு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

700 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்.. அமெரிக்க மாடல் எனக் கூறியவர் கைது..!

கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்ன?

தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து: என்ன காரணம்?

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments