Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல் எதிரொலி: 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் மழை... !

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (10:55 IST)
அடுத்த மூன்று மணி நேர்த்திற்கு தமிழகத்தின் அதிக மாவட்டங்களில் மழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியாவில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள அசானி புயலால் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தற்போது அசானி புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயலானது இன்று இரவு வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவை ஒட்டிய கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அசானி புயலால் தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தாம்பரம், சேலையூர், சேப்பாக்கம், மேடவாக்கம், மடிப்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
 
மேலும் அடுத்த மூன்று மணி நேர்த்திற்கு மழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன் படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை, விழுப்புரம், கரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், தேனி, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.67,000ஐ தாண்டிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு..!

சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!

செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்

இன்று ரம்ஜான் விடுமுறை இல்லை: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments