Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிலேயே மிக அதிகமாக கடன் வாங்கி இருக்கும் மாநிலம் தமிழ்நாடு.. எச் ராஜா

Siva
திங்கள், 10 பிப்ரவரி 2025 (10:56 IST)
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்திற்கு 4 லட்சத்து 33 ஆயிரம் கோடி கடன் இருந்தது. ஆனால், இப்போது அது 8 லட்சத்து 88 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள், இது 9 லட்சத்து 88 ஆயிரம் கோடியாக உருவாகும் என்று பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் இரு மடங்கு உயர்ந்துள்ளது என்றும், எனவே இந்தியாவிலேயே கடனாளி மாநிலம் தமிழகம் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவையில், கடந்த 2004 ஆம் ஆண்டு 2,400 ரூபாய் வீட்டு வரியாக இருந்த நிலையில், அதே வீட்டிற்கு இன்று 56,000 ரூபாய் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்றும், திமுக எம்பி மாநகராட்சி கூட்டத்தில் இதனை கூறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநகராட்சி நிர்வாகத்திற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர்களுக்கும் எந்தவித கட்டுப்பாடும் இல்லையா என்று எச். ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.64ஐ நெருங்கியதா?

விண்ணை பிளக்கும் ‘அரோகரா’ கோஷம்; பழனியில் கட்டண தரிசனம் ரத்து! - குவியும் பக்தர்கள்!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

டெல்லி தேர்தல் முடிவுகள் பீகாரிலும் எதிரொலிக்குமா? தேஜஸ்வி யாதவ் கருத்து..!

எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லாமல் அதிமுக விழா! புறக்கணித்த செங்கோட்டையன்! - எடப்பாடியாருக்கு எதிராக போர்க்கொடி?

அடுத்த கட்டுரையில்
Show comments