Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கு அம்மை: கேரள – தமிழகம் இடையே 13 பாதைகளில் சோதனை!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (14:37 IST)
தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 


கேரளாவில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இரண்டாவது நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதனைத்தொடர்ந்து கேரள மாநில சுகாதாரத்துறை கூறுகையில், குரங்கு அம்மை நோய் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்றும் வாயின் உள்பகுதி ஆகியவற்றுக்கு வலி இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு குறித்து அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை யாருக்கும் நோய் கண்டறியப்படவில்லை. தமிழ்நாட்டில் யாருக்காவது  குரங்கு அம்மை நோய் தாக்கம் கண்டறியப்பட்டால் உடனடியாக தனிமை படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

கேரள - தமிழ்நாடு இடையே 13 பாதைகளில் குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிப்பு பணியில் பொதுசுகாதார துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அண்ணாமலை தன்னைத் தானே காறி துப்பிக் கொள்ள தயாரா? - திமுக அமைச்சர் கேள்வி!

ராகுல் காந்தி காங்கிரசுக்காக பாடுபடுகிறார், நான் நாட்டுக்காக பாடுபடுகிறேன். கெஜ்ரிவால் பதிலடி:

தேர்தல் விதிகளை மீறினாராம்: டெல்லி முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ததால் பரபரப்பு

திருப்பூர் அருகே தனியார் மதுபான கூடம்.. பொங்கல் தினத்தில் போராட்டம் செய்த பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments