Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடே துக்கம் அனுசரிக்கும் நிலையில் ஆளுநர் ஶ்ரீரங்கத்தில் தரிசனம்!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (13:18 IST)
கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்ற போது காட்டேரி மலைப்பாதை பகுதியில் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 14 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட  13 பேர்  உயிரிழந்தனர். 
 
இதையடுத்து இன்று காலை சூலுார் விமானப்படை தளத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களும் சூலூரிலிருந்து சி - 130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. 
 
மேலும் இன்று மாலை டெல்லியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறும் என கூறப்படுகிறது. முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து நாடே துக்கம் அனுசரிக்கும் நிலையில் தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி ஶ்ரீரங்கத்தில் குடும்பத்துடன்  சாமி தரிசனம் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments