Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Mahendran
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (16:59 IST)
மத்திய அரசு சமீபத்தில் அகவிலைப்படியை  3 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும், இதனால் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு, நலத்திட்டங்களை அமல்படுத்தும் பணியில் அரசு முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் நலனை மேம்படுத்தும் முயற்சியாக, மாநில அரசு அதிகாரிகளுக்கும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளோம்.
 
01.07.2021 முதல் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 50 சதவீதமாக இருந்த அகவிலைப்படி அண்மையில் 53 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதேபோல, 01.07.2024 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 3 சதவீதம் உயர்வு வழங்கப்படும். இதனால் 50 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 53 சதவீதமாக அதிகரிக்கப்படும். 
 
இந்த உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இதற்காக, ஆண்டுக்கு ரூ.1931 கோடி கூடுதல் செலவினம் அரசுக்கு ஏற்படும். இருப்பினும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, இந்த கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்" என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

முதலாளியுடன் மனைவியை உடலுறவுக்கு வற்புறுத்திய கணவன்.. மறுத்ததால் முத்தலாக்

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. 2026 தேர்தலுக்கு ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments