Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் இராயபுரம் ஆர்.மனோ: ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் இராயபுரம் ஆர்.மனோ: ஈவிகேஎஸ் இளங்கோவன்
, ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (17:45 IST)
தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யாரை நியமிக்கலாம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னிடத்தில் ஆலோசித்தால் ராயபுரம் ஆர்.மனோவை தான் நியமனம் செய்வேன் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


 
 
வடசென்னை காங்கிரஸ் கட்சி சார்பில் பூத் ஏஜன்டுகளுக்கான பாராட்டு விழா வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வட சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர்.மனோ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டார்.
 
இந்த கூட்டத்தில் 1078 தேர்தல் வாக்கு சாவடி முகவர்கள் பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. இந்த பூத் ஏஜென்ட்டுகளை அமைக்க அரும்பாடுபட்ட  மாவட்ட நிர்வாகிகள், சர்க்கில் தலைவர்கள், வட்ட தலைவர்கள், ஆகியோர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், பாராட்டு நற்சான்று வழங்கினார்.
 
பின்னர் அவர் பேசுகையில் "தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் பூத் ஏஜென்டுகளை நியமிக்கவில்லை ஆனால் இராயபுரம் மனோ சென்னை நகரில் அமைத்து கொடுத்து விட்டார் அவருக்கு, வருங்காலத்தில் தமிழகததில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிச்சயம் அவர்களை அமைச்சராக்குவேன்.

மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னிடத்தில் அடுத்த தலைவராக தமிழக காங்கிரஸ் கட்சிக்கு யார் நியமிக்கலாம் என்று என்னிடத்தில் ஆலோசித்தால் இராயபுரம் ஆர்.மனோவை தான் நியமனம் செய்வேன் என்று அந்த கூட்டத்தில் சூளுரைத்தார். இதனால், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்குடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil