Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக முதல்வர் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: விருதுநகர் நபர் கைது!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (08:05 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து விருதுநகர் நபர் ஒருவர் அவதூறு கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் என்ற பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்தைப் பரப்பி வருவதாக தெரிகிறது.
 
இதனை அடுத்து திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் திருத்தங்கல் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார் நாகராஜ் அவதூறு கருத்துக்களை பரப்பி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 
 
இதனையடுத்து கைது செய்யப்பட்ட நாகராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments