Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக சாலை மறியல் - சிபிஎம்.மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,சிபிஐ.மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர்கள் கைது...

J.Durai
வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (13:19 IST)
மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய மாணவர் சங்க அமைப்பினர் ஆகியோர் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
சிபிஎம்.மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ.மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.
 
இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலச் செயலாளர் முத்தரசன்........
 
ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடைபெற்ற வருகிறது. கேரளா வயநாட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் ஆறுதல் களை தெரிவித்துக் கொள்வதோடு, எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் கேரள மக்களுக்கு செய்வோம்.  
 
இந்த நிதிநிலை அறிக்கை என்பது ஒட்டுமொத்த தேசத்திற்கான அறிக்கை அல்ல,ஆண்டு பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுடைய தேவைகளை அறிந்து பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.அதற்கு மாறாக மோடி அரசு தங்களுடைய ஆட்சி மற்றும் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாடு மற்றும் கேரள  உள்ளிட்ட பல மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் பீகார் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்கி உள்ளனர்.இவர்கள் ஆதரிக்கும் காரணத்தினால் மட்டும் அதிக நிதியை ஒதுக்கி உள்ளனர். 
 
ஜிஎஸ்டி உள்ளிட்ட ஏராளமான வரியை செலுத்தி கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. எந்த பட்ஜெட்டிலும் இப்படி ஒரு மாநிலம் புறக்கணிக்கப்பட்டது கிடையாது.இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுவதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.விவசாய விளைபொருளுக்கு விலை நிர்ணய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி குறித்து இந்த பட்ஜெட்டில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 
 
அதானி அம்பானி குடும்பங்கள் மேலும் மேலும் வளர்வதற்குரிய இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.இந்த பட்ஜெட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.
 
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு எதிரான பட்ஜெட் இது என தெரிவித்தார்.
 
இதனைத் தொடர்ந்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ( சிபிஎம்) ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர்  பேசியது.......
 
ஒன்றிய அரசின் அலுவலகம் முன்பு இன்று போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய அரசை பொருத்தவரை ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தன்னுடைய பெண்ணுக்கு மணவிழா நடத்திய அம்பானி அதானிக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு சலுகை அளிக்கக்கூடிய விதமாகத்தான் மோடி அரசுடைய பட்ஜெட் இருந்துள்ளது. 
 
வேலையில்லாமல் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கோ, நலிந்து வரும் விவசாயத்தை பாதுகாப்பதற்க
க்கோ, சிறு குறு தொழில்களை பாதுகாப்பதற்கோ, விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கோ இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கிடையாது. 
 
உத்திரபிரதேசத்தில் 60 ஆயிரம் பேருக்கு 47 லட்சம் பேர் காவல்துறை வேலைக்காக அப்ளை செய்துள்ளனர்.
இதுவே நாடு முழுவதும் வேலையில்லாமல் வாழக்கூடிய இளைஞர்கள் எந்த அளவுக்கு அதிகமாக உள்ளது என்பதை காட்டுகிறது.இந்த சூழலில் வேலை வாய்ப்பு அதிகரிப்பதற்கு இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் இருக்கக்கூடிய பட்ஜெட்டுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய கோட்பாடான கூட்டாட்சியில் பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments