Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 முதல் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தம்: விஷால் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (21:17 IST)
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்த வண்ணமே உள்ளது. தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படபிடிப்புகள் நடக்காது என அறிவித்துள்ளார். 
 
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட போது கேளிக்கை வரி உயர்த்தப்பட்டது. இதனால் டிக்கெட் விலை அதிகமாகியது. அதனை அடுத்து தமிழக அரசு சினிமாவிற்கு விதிக்கும் வரியை குறைக்க கோரி போராட்டம் அறிவிக்கப்பட்டது.
 
பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் கடந்த 8 நாட்களாக எந்த புதிய படத்தை வெளியிடவில்லை. இந்நிலையில் மார்ச் 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறது.
 
திரையரங்குகள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து அதே தினத்தில் இருந்து தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் செய்ய உள்ளது. இந்த அறிவிப்பை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் வெளியிட்டுள்ளார். 
 
அதன்படி மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நடக்காது, சினிமா சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் நடக்காது. போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடக்காது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments