Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் ஐடி ஊழியர் மரணம்!

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (07:37 IST)
சென்னை பெருங்களத்தூரில் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் ஐடி ஊழியர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

உடுமலைப்பேட்டையை சேர்ந்த மித்ரா என்ற 25 வயது ஐடி ஊழியர் பெருங்களத்துாரில் தங்கி, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் வெளிநாடு செல்ல தேர்வு பெற்ற இவர் நேற்று பணிக்கு செல்ல வழக்கம்போல் ரயில் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவர் செல்போன் பேசியபடியே தண்டவாளத்தை கடந்தபோது தண்டவாளத்தில் விரைவு ரயில் வந்ததை அவர் கவனிக்கவில்லை. ரயில் டிரைவர் ஹார்ன் அடித்தும், செல்போன் பேசும் மும்முரத்தில் இருந்த அவர் கவனிக்காததால் அவர் மீது ரயில் மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட மித்ரா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தண்டவாளத்தை கடப்பது சட்டப்படி தவறு என்பதும் தண்டவாளத்தை கடக்க அதற்கென கட்டப்பட்டுள்ள படிகளில்தான் கடக்க வேண்டும் என்றும் ரயில்வே துறை பலமுறை விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியும் படித்தவர்களே விதிகளை மீறுவதுதான் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட காரணமாகிறது. மேலும் செல்போனில் பேச தொடங்கிவிட்டால் பலர் சுற்றுப்புறத்தையே மறந்துவிடுகின்றனர் என்பதும் இதனால் பல விபரீதங்கள் ஏற்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments