த.வெ.கவில் உறுப்பினர் சேர்க்கை அணி உருவாக்கும்.! நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் விஜய்...!!

Senthil Velan
வியாழன், 7 மார்ச் 2024 (20:40 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
 
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மக்களவை தேர்தலில் போட்டியில்லை என அறிவித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் எனவும் தெரிவித்திருந்தார்.
 
இதை அடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.

அதில், மாநில செயலாளராக சி.விஜயலட்சுமி, மாநில இணை செயலாளராக எஸ்.என் யாஸ்மின், மாநில பொருளாளராக சம்பத்குமார்,  மாநில துணை செயலாளர்களாக விஜய்அன்பன் கல்லணை, எம்.எல் பிரபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ: டெஸ்ட் கிரிக்கெட் போட்டி..! ஆட்ட நேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன..?

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்கு கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் இருப்பது 'தீபத்தூண் அல்ல, சமணர் கால தூண்': கோவில் தரப்பு வாதம்!

மாலையில் மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. 1 சவரன் 1 லட்சத்தை தாண்டியதால் பரபரப்பு..!

லாட்ஜ் 4வது மாடியில் 7 நண்பர்களுடன் இளம்பெண் விருந்து.. போலீஸ் வந்ததால் இளம்பெண் செய்த விபரீத செயல்..!

60 ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் தொலைந்த சிஐஏ அணுகுண்டு.. இதனால் இந்தியாவுக்கு ஆபத்தா?

பஸ்ஸில் ஓடிய திலீப் படம்!. கோபமான பெண்!.. கேரளாவில் களேபரம்....

அடுத்த கட்டுரையில்
Show comments