Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1-12ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் கணிசமாக குறைப்பு: கல்வித்துறை அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (11:29 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் கிட்டத்தட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த முடிவுகளை இன்னும் மத்திய மாநில அரசுகள் எடுக்கவில்லை. அக்டோபர் முதல் பள்ளிகள் திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இது குறித்த முறையான அறிவிப்பு இன்னும் அரசிடம் இருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
அக்டோபர் அல்லது நவம்பரில் பள்ளிகள் தொடங்கினாலும், அதன் பின்னர் இருக்கும் ஆறு மாதங்களில் பாடங்களை நடத்தி முடிக்க முடியுமா என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் இந்த ஆண்டு மட்டும் கணிசமாக குறைக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
ஏற்கனவே ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடக்குறைப்பு பணி நிறைவடைந்து விட்டது என்றும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடக்குறைப்பு பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த பணிகள் நிறைவடைந்து விடும் என்றும் பள்ளிக்கல்வித்துறை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு கல்வி ஆண்டு மட்டும் குறைக்கப்பட்ட பாடத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பள்ளிக்கல்வித்துறை எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments