Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதியை கொஞ்ச நாள் முன்னர் ஒரு நபர் சரமாரியாக தாக்கினார்: நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (07:58 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கில் தினமும் பல்வேறு தகவல்கள் வந்தவாறே உள்ளன. பலர் தானாக முன்வந்து தகவல்கள் அளிக்கின்றனர்.


 
 
சுவாதி படுகொலை செய்யப்பட்ட அதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு நபர் சந்தித்துப் பேசியதாகவும், அவரை கண்ணத்தில் சரமாறியாக அடித்ததாகவும் தமிழ்ச்செல்வன் என்ற தனியார் நிறுவன ஊழியர் கூறியுள்ளார்.
 
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழ்ச்செல்வன் இது தொடர்பாக பேட்டியளித்தார் அதில், நான் தினமும் காலை 6.50 மணிக்கு செங்கல்பட்டு ரயிலில் ஏற 6.40-க்கு ரயில் நிலையத்தில் இருப்பேன். நான் 4-வது கம்பார்ட்மெண்ட்டில் ஏறுவேன். சுவாதி 5-வது கம்பார்ட்மெண்ட்டில் பெண்களுக்கான பெட்டியில் ஏறுவார்.
 
கடந்த 6, 7 தேதி போல சுவாதி கொலையுண்ட அதே இடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் தன் கையில் வைத்திருந்த வாட்டர் பட்டிலால் சுவாதியை சரமாறியாக அடித்தார். அதில் நிலைதடுமாறி சுவாதியின் மொபைல் கீழே விழுந்தது.
 
கீழே விழுந்த மொபைல் போனை எடுத்துக்கொண்டு, ரயில் வந்தவுடன் ரயில் ஏறி சுவாதி போய்விட்டார். அவர் எந்தவித ரியாக்சனும் காண்பிக்கவில்லை. அங்கிருந்தவர்கள் என்ன இந்த பொண்ணு எந்தவித ரியாக்சனும் காண்பிக்கவில்லை. அப்படி அடித்துவிட்டு போகிறானே என்று பேசிக்கொண்டார்கள்.
 
ஆனால் காவல் துறை வெளியிட்ட புகைப்படம் தெளிவில்லாமல் இருப்பதால் அன்று சுவாதியை தாக்கியவன் தான் இந்த நபரா என்பது சரியாக தெரியவில்லை என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குலதெய்வ வழிபாட்டுக்கு எதிராக பேசினாரா ஆர்.என்.ரவி: காவல்துறையில் புகார் அளித்த ஆளுனர் மாளிகை..!

இன்று 8 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்.. ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு..!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம்.. மேலும் 7 பேர் கைது.. இன்னும் கைது இருக்கும் என தகவல்..!

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments