Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதியின் அப்பாவுக்கு ராம்குமாரை முன்னதாகவே தெரியும்!

Webdunia
புதன், 13 ஜூலை 2016 (11:35 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.


 
 
இந்த கொலை வழக்கில் பல்வேறு மர்மங்களும், அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகளுமாய் பல்வேறு சந்தேகங்கள் எழும்பி வருகின்றன. கன்னித்தீவு போல் தொடர் மர்மங்களாக நீடித்து வருகிறது இந்த கொலை வழக்கு.
 
ராம்குமார் குற்றவாளி என காவல்துறை தரப்பும், அவர் குற்றாவாளி இல்லை என ராமகுமாரின் சார்பாக ஆஜராக இருக்கும் வழக்கறிஞர்கள் தரப்பும் நிரூபிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தினர்.
 
இந்த அணிவகுப்புக்கு பின்னர் தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள், நேற்று புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் ராம்குமாரை ஏற்கனவே சுவாதியின் அப்பாவுக்கு தெரியும் என கூறினர்.
 
சுவாதியும் ராம்குமாரும் ஏற்கனவே நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். ஆனால் சுவாதியை ராம்குமார் கொலை செய்யவில்லை. கொலை நடந்த அன்று ராம்குமார் மேன்சனில் இருந்ததாகவும், இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அவர் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறினார்.
 
சுவாதியின் அப்பாவுக்கும் என்னை தெரியும். என்னை அவர் பார்த்திருக்கிறார். வேண்டுமென்றே இந்த வழக்கில் நான் சிக்க வைக்கப்பட்டிருக்கிறேன் என ராம்குமார் கூறியதாக வழக்கறிஞர் கூறினார்.
 
நேற்று அடையாள அணிவகுப்பின் போது ராம்குமாரை சுவாதியின் அப்பா அடையாளம் காட்டினார் என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள்: சீமான்

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது: போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

கனடா பிரதமர் பதவி.. பின்வாங்கினார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா!

காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி.. மகா கும்பமேளா விழாவில் பங்கேற்பு..!

ஸ்மார்ட்போன் விவகாரம்: மகன், தந்தை என மாறி மாறி தூக்கில் தொங்கி தற்கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments